ரெம்டெசிவர் மருந்து தொடர்பில் அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்

Author
Fathima- inTamilnadu
Report
0Shares

கொரோனா தீவிரமாக உள்ளவர்களுக்கு ரெம்டெசிவர் மருந்து பலனளிக்கவில்லை என்பதில் உடன்படுவதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இன்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், 'ரெம்டெசிவர்', 'லோபினாவிர்', 'ரிட்டோனாவிர்' மருந்துகள் கரோனா தீவிரமாக உள்ளவர்களுக்கு பலனளிக்கவில்லை.

கொரோனா ஆரம்பக் கட்டத்தில் இருப்பவர்களுக்கு இத்தகைய மருந்துகள் பலன் அளிக்கிறது என்றார்.

மேலும் 7.5% இடஒதுக்கீடு விவகாரத்தில் இன்றும் கால அவகாசம் உள்ளது என்றும், ஆளுநரின் முடிவுக்குப் பிறகு மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வு தமிழகத்தில் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார்.