அரசுப்பள்ளி மாணவன் நீட் தேர்வில் சாதித்தது எப்படி?

Author
Fathima- inTamilnadu
Report
0Shares

நீட் தேர்வில் 720-க்கு 664 மதிப்பெண்கள் எடுத்து தேனியை சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர் ஜீவித்குமார் வெற்றி பெற்றுள்ளார்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சில்வார்பட்டியை சேர்ந்த ஆடு மேய்க்கும் கூலி தொழிலாளி தட்சிணாமூர்த்தி மற்றும் மகேஸ்வரி தம்பதியரின் மூத்த மகன் ஜீவித் குமார்.

அரசு பள்ளியில் பயின்று 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்த ஜீவித் குமார், நடந்து முடிந்த நீட் தேர்வில் அரசுப் பள்ளிகளில் இந்திய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

கடந்தாண்டு எழுதிய நீட் தேர்வில், 720-க்கு 193 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றார், அதன்பின் ஓராண்டு காலமாக ஆசிரியர்களின் உதவியோடு,

நாமக்கல்லில் உள்ள தனியார் பயிற்சி வகுப்பு ஒன்றில் பயின்ற ஜீவித் குமார், தற்போது நீட் தேர்வில் 664 மதிப்பெண்களை பெற்றுள்ளார், இந்திய அளவில், தரவரிசைப் பட்டியலில் 1123 வது இடத்தையும் பிடித்துள்ளார்.