எல்லாம் இந்த ஆலமரத்துக்காக!.. வியக்க வைக்கும் கூட்டுக் குடும்பத்தினரின் நெகிழ்ச்சி செயல்

Author
Fathima- inTamilnadu
Report
0Shares

தமிழகத்தில் 150 ஆண்டுகால ஆலமரத்துக்காக நிலத்தை பங்கு போடாமல் வாழ்ந்து வரும் கூட்டுக்குடும்பத்தை பற்றிய சுவாரசிய தகவல்களை அறிந்து கொள்வோம்.

பெரம்பலூரில் இருந்து 20 கி.மீ தொலைவில் இருக்கிறது கண்ணபாடி எனும் கிராமம், இக்கிராமத்தில் பெரும்பாலானவர்கள் விவசாயம் செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

இங்கு வசிக்கும் கூட்டுக்குடும்பத்தினரின் ஏழு ஏக்கர் நிலத்தில் சுமார் 150 வயது மதிக்கத்தக்க ஆலமரம் ஒன்று வளர்ந்து நிற்கிறது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே நிலத்தை பிரிப்பது பற்றிய பேச்சு எழுந்ததும், மரம் வெட்டப்பட்டு விடும் என்ற அச்சத்தில் இன்றளவும் நிலத்தை பிரிக்காமல் பாதுகாத்து வருகின்றனர்.

மரத்தடியில் சாமி சிலையை வைத்து ஆலமரத்தை கோயிலாக வழிபட்டு வருகின்றார்கள்.

தங்களுடைய மூதாதையர்கள் விட்டுச் சென்ற ஆலமரத்தை பாதுகாப்பது தங்களுடைய கடமை என எண்ணும் குடும்பத்தினர் ஒவ்வொருவரும் ஆலமரத்தை பத்திரமாக பாதுகாத்து வருகிறார்கள்.

பிரதீப் என்பவர் Times OF Indiaக்கு அளித்த பேட்டியில், எங்களுடைய முன்னோர்களை போன்று இந்த மரமும் முக்கியமான ஒன்று.

சிறுவயதில் இந்த மரத்தை சுற்றி என் தந்தை விளையாடி இருப்பதாக கூறியிருக்கிறார்.

நாங்கள் பணக்காரர்கள் கிடையாது, எங்களது குடும்பத்தினர் வாழ்வில் கஷ்டமான சூழல்கள் இருந்தது.

ஆனால் எந்தவொரு நிலையில் இந்த மரத்தை வெட்டவோ, நிலத்தை பிரிக்கவோ நினைத்ததில்லை என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சுற்றுச்சூழல் ஆர்வலரான ரமேஷ் கருப்பையா கூறுகையில், கடந்த வாரத்தில் சம்பவ இடத்திற்கு சென்றேன், ஆலமரம் சுமார் 150 ஆண்டுகாலம் பழமையாக இருக்கலாம்.

எனினும் ஆராய்ச்சி செய்தால் மட்டும் உண்மையான வயது தெரியவரும் என தெரிவித்துள்ளார்.

மேலும் மக்களின் கலாச்சார மற்றும் சமூக வாழ்க்கையில் ஒரு மரம் எவ்வளவு முக்கியமானது என்பதையே இது காட்டுகிறது என கூறும் ரமேஷ், இக்கால கட்டத்தில் இந்நிகழ்வு மிக அரிதான ஒன்று எனவும் தெரிவித்துள்ளார்.