தேர்வு முடிவில் குளறுபடி இருக்கலாம் அதுக்காக நீட் தேர்வை ரத்து செய்ய முடியுமா ?

Author
Gokulan- inTamilnadu
Report
0Shares

தமிழக பாஜக வழக்கறிஞர் அணி சார்பில், மத்திய அரசின் சாதனைகளை குறிப்பிடும் வகையில் பாஜக அலுவலகத்தில் கொலு வைக்கப்பட்டுள்ளது. இதில் கலந்து கொண்ட,தமிழக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது நீட் தேர்வில்அரசு பள்ளியில் படித்து சாதனை படைத்த தமிழக மாணவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்த அவர். அரசு பள்ளி மாணவர் சாதனை படைத்திருப்பது மூலம் நீட் வேண்டாம் என கூறியவர்களுக்கு தக்க பதிலடி கிடைத்திருப்பதாகவும் கூறிய எல்.முருகன்.

திரிபுரா போன்ற மாநிலங்களில் நீட் தேர்வு முடிவில் ஏற்பட்ட குளறுபடி சிறிய குளறுபடிதான் என்றும் எல்லா தேர்வுகளிலும் குளறுபடி இருக்கதான் செய்யும் அதற்காக தேர்வை ரத்து செய்ய முடியுமா ? என கேள்வி எழுப்பினார்.

மேலும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.