ஆறு மாதம் ஒளிந்து விட்டு தற்போது முதல்வர் வேட்பாளரா?? - அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்

Author
Irumporai- inTamilnadu
Report
0Shares

கமல்ஹாசனுக்கு மக்களைப் பற்றி எல்லாம் கவலைகிடையாது ஆறு மாதம் ஒளிந்து இருந்து விட்டு இப்போது முதல்வர் வேட்பாளராக வருகிறார் என அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல் செய்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமாரிடம் மக்கள் நீதி மய்ய கட்சியின் முதல்வர் வேட்பாளராக கமல்ஹாசன் அறிவிக்கப்பட்டது பற்றி கேள்வி எழுப்பபட்டது.

அதற்கு பதில் கூறிய அமைச்சர் ஜெயக்குமார், கமல்ஹாசனை தான் பிக்பாஸ் ஆரவாகத்தான் பார்ப்பதாகவும், கடந்த ஆறு மாதம் எங்கோ ஒளிந்து இருந்து விட்டு தற்போது முதல்வர் வேட்பாளராக வருகிறார் அவருக்கு மக்களைப் பற்றி கவலை எல்லாம் இல்லை என கிண்டலாக பதில் அளித்தார்.

மேலும் நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் அதிமுக அரசின் நிலைப்பாடு என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.