மேலும் 3 மாதம் கேட்கும் ஆறுமுகசாமி கமிஷன்

Author
Irumporai- inTamilnadu
Report
0Shares

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை செய்ய, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில், 2017ல் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.

விசாரணைக்கு 3 மாதம் அவகாசம் தரப்பட்டபோதும், விசாரணை முடியாததால் அவ்வப்போது காலநீட்டிப்பு கொடுக்கப்பட்டது.

தற்போது 8 வது முறையாக நீட்டிக்கப்பட்ட பதவிக்காலம், இம்மாதம், 24ம் தேதி முடிகிறது. ஆறுமுகசாமி கமிஷனின் விசாரணைக்கு தடை விதிக்க கோரி அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வழக்கு தொடர்ந்துள்ளது.இந்த வழக்கு இன்னும் நிலுவையில் தான் உள்ளது.

இதனால், விசாரணை செய்ய முடியாத நிலையில் ஆறுமுகசாமி கமிஷன் உள்ளது. இந்த நிலையில், விசாரணை கமிஷன் பதவி காலத்தை, மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்க கோரி, விசாரணை கமிஷன் சார்பில், தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. ஆறுமுகசாமி கமிஷன்.

அப்பல்லோ மருத்துவமனையின் தடை நீக்குவதற்கான மனு, அரசு வழக்கறிஞர்கள் விரைந்து விசாரிப்பதற்கான மனு போன்ற மனுக்கள் விசாரணையின் போது விசாரிக்க, வேண்டும் என, கடிதத்தில் எழுதி உள்ளதாக கூறப்படுகிறது