23 வருடமாக தியாகியினை அலையவிட்ட அதிகாரிகள் வெட்கப்பட வேண்டும்:உயர் நீதிமன்றம்

Author
Irumporai- inTamilnadu
Report
0Shares

9 வயது சுதந்திர போராட்ட வீரரை, நீதிமன்றத்தில் அணுக வைத்தத அதிகாரிகள் வெட்கப்பட வேண்டும் எனசென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர், 99 வயதான, எஸ்.கபூர் இவர் நேதாஜியின் இந்திய விடுதலை படையில் பங்கேற்று . பிரிட்டிஷ் படையினரால் கைது செய்யப்பட்டு, மியான்மர் ரங்கூன் சிறையில், 1945 ஜூலை முதல், 1946 ஜனவரி வரை இருந்துள்ளார்.

சுதந்திரத்திற்கு பிறகு.தமிழகம் வந்த அவர் வருமானம் இல்லாததால், சுதந்திர போராட்ட வீரர்களுக்கான பென்ஷன் கேட்டு, 1997ல் சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேரில் சென்று, தேவையான ஆவணங்களை விண்ணப்பித்துள்ளார்.

மத்திய அரசு மாநில அரசுடன் ஆலோசித்து, மனுவை பரிசீலிப்பதாக தெரிவிக்கப்பட்டது.பலமுறை அலகழித்துள்ளது. மீண்டும் 2011ல், தேவையான ஆவணங்களை இணைத்து, தாசில்தார் அலுவலகத்திலும் மனு அளித்துள்ளார்அதிலும்எந்த பதிலும் இல்லை.

மீண்டும் மாவட்ட கலெக்டர்களிடம்,2014 மற்றும் 2016 நினைவூட்டும் கடிதம் அளித்துள்ளார். எந்த பலனும் இல்லாததால் முதல்வரின் தனிப்பிரிவுக்கு, மனு அளித்துள்ளார் அதிலும் பலனில்லை

மத்திய - மாநில அரசு திட்டத்தின்படி, தனக்கு தகுதி இருந்தும் 23 ஆண்டுகளாக, 99 வயதிலும் கூட அலைக்கழிக்கப்படுவதாகவும்.எனவே, என் விண்ணப்பத்தை, குறிப்பிட்ட காலத்துக்குள் பரிசீலித்து, பென்ஷன் வழங்கும்படி, மத்திய - மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்.என உயர்நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த, நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் பிறப்பித்த உத்தரவில் 99 வயது (தியாகி)மனுதாரை நீதிமன்றத்தை அணுக வைத்த பொறுபற்ற அதிகாரிகள் இந்தசெயலுக்கு வெட்கப்பட வேண்டும். மனுதாரருக்கு, 99 வயதாவதால் இந்த வழக்கை விரைந்து முடிக்க, நீதிமன்றம் விரும்புகிறது.

ஆகவே, மத்திய அரசிடம் இருந்து, உடனடியாக பதில் பெற்று மாநில அரசு அதிகாரிகளும், உடனடியாக பதில் அளிக்க வேண்டும். எனவும் விசாரணையினை நவ. 6ம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.