நடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு மிரட்டல்: வழக்குபதிவு செய்தது காவல்துறை

Author
Fathima- inTamilnadu
Report
2218Shares

நடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு ஆபாசமாக மிரட்டல் விடுத்த நபர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

முத்தையா முரளிதரனின் வாழ்க்கை படமான 800ல் விஜய் சேதுபதி நடிப்பதற்கு பலத்த எதிர்ப்பு எழுந்தது.

இதனையடுத்து முத்தையா முரளிதரனும் விஜய் சேதுபதியை விலகிக் கொள்ளுமாறு கோரிக்கை விடுக்க, “நன்றி .. வணக்கம்” என டுவிட் செய்திருந்தார்.

இந்நிலையில் @ItsRithikRajh என்ற ட்விட்டர் பதிவர், தனது பக்கத்தில் விஜய் சேதுபதியின் சிறு பெண் குழந்தையின் படத்தை பதிவிட்டு, மிக ஆபாசமான கருத்துகளையும் தெரிவித்திருந்தார்.

இது சர்ச்சையை கிளப்பிய நிலையில், தற்போது அந்த பக்கம் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் குறித்த நபர் மீது வழக்குப் பதிவுசெய்துள்ளதாக சென்னை மாநகர ஆணையர் மகேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "ஒரு பிரபலத்திற்கு எதிராக சமூக வலைதளங்களில் பதிவுசெய்யப்பட்ட கருத்து குறித்து பலரும் கவலை தெரிவித்துவருகின்றனர். இது தொடர்பான புகார் வந்ததையடுத்து, சைபர் பிரிவு வழக்கு ஒன்றைப் பதிவுசெய்துள்ளது" என்று கூறியுள்ளார்.