அடுத்தடுத்து மரணம்: குழந்தைகளை கொன்றுவிட்டு தாய் தற்கொலை

Author
Fathima- inTamilnadu
Report
5952Shares

தேனி அருகே இரண்டு குழந்தைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி அருகே அம்மச்சியாபுரம் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் குமார் செண்பகவள்ளி(29) தம்பதி. இவருக்கு சுரேனா(10) மற்றும் சுரேஸ்ரீ(7) என இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் சுதர்சன் (3) என்ற மகனும் உள்ளனர்.

கொத்தனார் வேலை செய்வது வரும் சுரேஷ் குமாருக்கும், செண்பகவள்ளிக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்தது.

இதனால் மனமுடைந்த செண்பகவள்ளி, தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தார், இதன்படி அரளி விதயை அரைத்து, தான் அருந்தியதுடன் குழந்தைகளுக்கும் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் அவர்கள் 3 பேரையும் தேனி அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர்.

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் செண்பகவள்ளி மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

குழந்தைகளுக்கு சிகிச்சையளித்த நிலையில், அவர்களும் அடுத்தடுத்து உயிரிழந்தனர், இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.