விஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல் விடுத்த இளைஞர் மன்னிப்பு கோரினார்

Author
Mohan Elango- inTamilnadu
Report
6113Shares

நடிகர் விஜய் சேதுபதி கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிக்கபோகிறார் என்கிற அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. சினிமா தொடங்கி அரசியல் பிரபலங்கள் வரை விஜய் சேதுபதி 800 திரைப்படத்தில் நடிக்கக்கூடாது எனக் கோரிக்கை விடுத்தனர்.

இலங்கையில் இனப்படுகொலையில் ஈடுபட்ட ராஜபக்‌ஷேக்களுக்கு ஆதரவாக முத்தையா முரளிதரன் செயல்பட்டார் என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து இந்த படத்திலிருந்து விலகிவிடுமாறு முரளிதரன் விஜய் சேதுபதிக்கு கோரிக்கை வைத்திருந்தார். விஜய் சேதுபதியும் இந்த படத்திலிருந்து விலகினார்.

இந்நிலையில் விஜய் சேதுபதியின் மகளுக்கு இணையத்தில் ஆபாசமாக மிரட்டல் விடுக்கப்பட்டது கடும் சர்ச்சைக்குள்ளானது. இதனைத் தொடர்ந்து சைபர் கிரைம் வழக்குப்பதிவு செய்து அந்த இளைஞர் இலங்கையைச் சேர்ந்தவர் என்பதை கண்டுபிடித்துள்ளனர்.

அந்த இளைஞர் ஐபிசி தமிழ் மூலம் விஜய் சேதுபதி மற்றும் தமிழர்களிடம் மன்னிப்பு கேட்பதாக தெரிவித்துள்ளார். மேலும் தான் அறியாமல் அப்படி பேசிவிட்டதாகவும் இனிமேல் அதுபோல் செய்யமாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.