சாத்தான்குளம் ஜெயராஜ் - பென்னிக்ஸ் கொடூரமாக சித்ரவதை செய்து கொலை - சிபிஐ எப்.ஐ.ஆரில் அம்பலம்

Author
Mohan Elango- inTamilnadu
Report
36537Shares

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் காவலர்களால் கடுமையாக தாக்கப்பட்டு உயிரழந்த சம்பவம் தேசத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்திருந்தது.

இந்த வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது. சிபிஐ எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது.

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஜெயராஜ், மகன் பென்னிக்ஸின் கொடூர சித்ரவதை பற்றி சிபிஐ எஃப்.ஐ.ஆரில் அம்பலமாகியுள்ளது. ஜூன் 16ம் தேதி இரவு 7.30 மணி அளவில் வணிகர்கள் ஜெயராஜ், மகன் பென்னிக்ஸை சாத்தான்குளம் போலீஸ் கைது செய்தது.

காவல் நிலையத்தின் அறையில் ஆடைகளை களைந்து தந்தையையும் மகனையும் காவலர்கள் தாக்கி உள்ளனர். ஜெயராஜ், பென்னிக்ஸை மேஜை மீது குனிய வைத்து பின்புறத்தில் காவலர்கள் கொடூரமாக அடித்துள்ளனர்.

இருவரையும் திமிரவிடாமல் 3 காவலர்கள் பிடித்து கொள்ள ஆய்வாளர் ஸ்ரீதர், காவலர் முத்துராஜா அடித்துள்ளனர். தந்தையையும் மகனையும் மாறி மாறி போலீஸ் தாக்கியதில் ரத்தம் கொட்டத் தொடங்கியது.

ரத்தம் சொட்ட சொட்ட 2 பேரையும் போலீஸ் கொடூரமாக தாக்கி உள்ளதாக சிபிஐ குற்றம்சாட்டி உள்ளது. சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு முதல் தகவல் அறிக்கையில் நெஞ்சை பதற வைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளது.