7.5% உள் ஒதுக்கீடு: ஆளுநருக்கு காத்திருக்காமல் அரசாணை வெளியிட்டு தமிழக அரசு அதிரடி

Author
Mohan Elango- inTamilnadu
Report
1588Shares

மருத்துவ இடங்களில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பிரத்யேகமாக 7.5% இடங்களை ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

நீட் தேர்வால் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ இடங்கள் கிடைப்பதில்லை என்கிற குறையை களைய 7.5% இடங்களை ஒதுக்க தமிழக சட்டமன்றம் ஒருமனதாக மசோதா நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டிருந்தது.

ஆனால் அந்த மசோதாவிற்கு ஒப்புதல் தராமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

இந்நிலையில் ஆளுநருக்கு தொடர்ந்து அழுத்தம் தர வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன.

ஆனால் மேலும் மூன்று, நான்கு வாரங்கள் ஆகும் என ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மருத்துவ இடங்களில் 7.5% இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

ஆளுநரின் ஒப்புதலுக்கு காத்திருக்காமல் தமிழக அரசு புதிய வழியை கையாண்டுள்ளது.