சசிகலா நன்றி தெரிவித்த அந்த 4 பேர் யார்? எதற்கு?

Author
Praveen Rajendran- inTamilnadu
Report
142115Shares

சசிகலாவின் விடுதலைக்கான அவரது அபராத தொகையை செலுத்திய அந்த 4 பேருக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார் சசிகலா என தாவல் வெளியாகியுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த 2017ஆம் ஆண்டில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ 10 கோடி அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டதால், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார் சசிகலா.

தற்போது தண்டனைக் காலம் முடிவடையும் தருவாயில் உள்ளதால் சசிகலா அவர்களுக்கு விதிக்கப்பட்ட ரூ.10 கோடி அபராதத்தை செலுத்திவிட்டால் விரைவில் விடுதலை ஆகலாம் எனக் கூறப்பட்டது.அதனை தொடர்ந்து அபராத தொகையை கட்டுவதற்கான வேலைகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில் அந்த அபராத தொகைக்கான டி.டியினை சசிகலாவின் வழக்கறிஞர் முத்துக்குமார் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் கட்டியிருக்கிறார்.இதனால் வருகிற 2021ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி சசிகலா விடுதலை ஆவது உறுதியானது.

மேலும் இந்த அபராத தொகையை விவேக்,ஹேமா.பழனிவேல் மற்றும் வசந்த தேவி ஆகியோர் தான் கட்டியுள்ளனர்.இதில் பழனிவேல் சசிகலாவின் மைத்துனர், வசந்தா தேவி பழனிவேலின் மனைவி, ஹேமா டாக்டர் வெங்கடேசின் மனைவி, விவேக் இளவரசியின் மகன்.

இதில் ஹேமா தேவி பெயரில் ஆக்ஸிஸ் பாங்கில் ரூ.3 கோடிக்கு டிடி எடுக்கப்பட்டது.மேலும் எஸ்பிஐ வங்கியில் பழனிவேல் மற்றும் வசந்தா தேவி ஆகியோரது பெயரில் முறையே ரூ.3.25 லட்சம் மற்றும் ரூ.3.7 கோடிக்கும் டிடி எடுக்கப்பட்டது.அதே போல், ஆக்ஸிஸ் வங்கியில் விவேக் பெயரில் 10ஆயிரம் ரூபாய்க்கான டி.டியும் எடுக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தின் அபராத தொகை செலுத்தப்பட்டு விட்டதால் வருகிற ஜனவரி 27ம் தேதி சசிகலா அவர்களின் விடுதலை உறுதி செய்யப்பட்டது.டி.டி. செலுத்தப்பட்ட தகவல் தெரியவந்ததும், சிறை நிர்வாகம் மூலமாக தனது வழக்கறிஞரிடம் பேசி அந்த நாலு பேருக்கும் நன்றி சொல்லிவிடுங்கள் என்று கூறியிருக்கிறார் சசிகலா.

முன்னதாக சசிகலா அவர்கள் அபராத தொகைக்காக தஹனது சொத்துக்களை விற்க முடிவு செய்திருந்தார்.ஆனால் அந்த பிரச்சனை தற்போது முடிவுக்கு வந்துள்ளது.மேலும் சசிகலா அவர்கள் விடுதலைக்கு பிறகு டிடிவி தினகரன் அவர்களது மகளின் திருமணத்தை முடித்த பிறகு சென்னைக்கு வருவார் எனக் கூறப்படுகிறது.


You May Like This