ஆன்லைன் ரம்மி சூதாட்ட விளையாட்டுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது

Author
Praveen Rajendran- inTamilnadu
Report
850Shares

ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்ட விளையாட்டுக்கு தடைவிதித்த தமிழக அரசின் அவசர சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார்.

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டிற்கு தற்போது தமிழகத்தை சேர்ந்த பலரும் பலிக்கடாவாக ஆகின்றனர்.குறிப்பாக தமிழகத்தில் உள்ள இளைஞர்கள் அதிகமானோர் தங்களது பணத்தை இழந்து அதன் பிறகு தற்கொலையும் செய்து கொள்கிறார்கள் .

இந்த அவலத்திற்கு முடிவுக்கட்டும் விதமாக தமிழக அரசு ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்ட விளையாட்டுக்கு தடை விதித்து அவசர சட்டம் இயற்றப்பட்டது.இந்த சட்டத்திற்கு கவர்னர் அவர்கள் ஒப்புதல் அளித்துள்ளார்.

அதன் படி தடையை மீறி ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுவோருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதமும், 6 மாத சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆன்லைன் விளையாட்டை நடத்துவோருக்கு ரூ.10 ஆயிரம் அபராதமும் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.