அரியர் தேர்வு ரத்து குறித்து ஆன்லைன் வீடியோவில் விசாரணை:மாணவர்களை எச்சரித்த நீதிபதிகள்

Author
Praveen Rajendran- inTamilnadu
Report
1058Shares

அரியர் தேர்வு ரத்து குறித்து ஆன்லைன் வீடியோ கான்பரன்சில் அதிக மாணவர்கள் இணைந்து இடையூறு ஏற்பட்டதால் மாணவர்களை எச்சரித்து நீதிபதி வெளியேற்றியது பதற்றத்தை ஏற்படுத்தியது.

அறியார் தேர்வு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக விசாரணையை நடத்தினர்.

அப்போது வழக்கின் நிலவரத்தை தெரிந்து கொள்வதற்காக ஆன்லைன் கான்பரன்சில் 100 க்கும் அதிகமான மாணவர்கள் ஒரே நேரத்தில் இணைந்தனர்.இதனால் நெட்ஒர்க்கில் இடையூறு ஏற்பட்டது.வீடுகளின் தொலைக்காட்சி ஒலி, மாணவர்களின் பேச்சுக்கள் என தொடர்ந்து இடையூறு ஏற்பட்டதால் நீதிபதிகள் அதிருப்தி அடைந்தனர்.

இதனால் மாணவர்களை ஒவ்வொருவராக ஆன்லைன் கான்பரன்சில் இருந்து வெளியேறும்படி நீதிபதிகள் அறிவுறுத்தினார்.ஆனால் மாணவர்கள் அதனை கேட்கவில்லை.இதனால் விசாரணை நிறுத்தப்பட்டது. ஒவ்வொருவராக வீடியோ கான்பரன்சிங்கில் இருந்து நீக்கப்பட்டனர். மாணவர்கள் உடனடியாக வெளியேறாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என நீதிபதிகள் எச்சரித்தனர்.