அமித் ஷாவின் வருகை எதிரொலி : #GoBackAmitShah ஹாஷ்டேக்கில் டிரெண்டிங்கில் இந்தியளவில் முதலிடம்

Author
Nalini- inTamilnadu
Report
4849Shares

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று சென்னை வருகிறார். இதனால் சென்னையில் மத்திய ரிசர்வ் போலிஸ் படை, மற்றும் சிறப்பு பணிக்குழு கமாண்டோக்கள் உட்பட மத்திய பாதுகாப்பு அமைப்புகளின் 3,000 க்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அமித் ஷா சென்னை வந்ததும் அவரது பயணத்திற்கு வழிவகுக்க சிறிது நேரம் போக்குவரத்து நிறுத்தப்படும் என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

மாநில பாஜக தலைவர் எல் முருகன் தலைமையில், தற்போது நடைபெற்று வரும் வேல் யாத்திரையில் ஆற்றலை செலுத்தத் தொடங்கியுள்ள கட்சி தொண்டர்களுக்கு அமித்ஷாவின் வருகை ஒரு மன உறுதியை அதிகரிக்கும் என்று பாஜக தலைவர்கள் நம்புகின்றனர்.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தமிழகம் வருவதற்கு எதிராக டுவிட்டரில் #GoBackAmitShah ஹாஷ்டேக் டிரெண்டிங் ஆகி வருகிறது. இது இந்தியளவில் முதலிடத்தில் உள்ளது. பிரதமர் மோடி தமிழகம் வரும்போது #GoBackmodi ஹாஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டிங் ஆனது குறிப்பிடத்தக்கது.