தமிழகத்தில் மீண்டும் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Author
Irumporai- inTamilnadu
Report
120288Shares

தமிழகத்தில் நாளை முதல் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில், சில நாட்களாக மழை பொழிவு குறைந்துள்ளது.

இந்த நிலையில் வங்கக்கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் தமிழகத்தில் மீண்டும் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது

இந்த நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ள நிலையில் தமிழகத்தில் நாளை மறுநாள் (நவ 23) முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மத்திய வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதனால் நவம்பர் 24ஆம் தேதி முதல் தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


You May Like This