காசி வழக்கில் திடீர் திருப்பம்- ஆதாரங்களை அழித்த தந்தை கைது

Author
Irumporai- inTamilnadu
Report
3004Shares

மாணவிகள் முதல் விஐபிக்களின் மனைவிகள் வரை காதல் வலையில் சிக்க வைத்து, ஆபாசப் புகைப்படங்களை எடுத்து வைத்துக் கொண்டு அவர்களிடம் பணம் பறிப்பதையே வேலையாக கொண்டிருந்தவர் காசி.

இந்த நிலையில் காசியை எதிர்த்து சென்னையை சேர்ந்த பெண் புகார் அளித்ததன் பேரில், கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார்.

பெண்களை ஏமாற்றி பணம் பறித்து கார், பங்களா என ராஜ வாழ்க்கை வாழ்ந்த காசி மீது பொள்ளாச்சி சம்பவத்தை போலவே அரங்கேறிய சில குற்றங்கள் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது

இதனால்,வழக்கு சிபிசிஐடிக்கு மாறியது அவர்களின் விசாரணையில் காசியின் ஒரு லேப்டாப்பில் பல பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

ஆனால் அந்த லேப்டாப்பில் இருந்த ஆதாரங்கள் அனைத்தும் அழிக்கபட்டிருந்தது.

இந்த குற்றத்தை காசியின் தந்தை தான் செய்தார் என விசாரணையில் தெரிய வந்த்து இதனால் காசியின் தந்தை கைது செய்யப்பட்டார்.

மேலும், அந்த லேப்டாப்பில் இருந்த ஆதாரங்களை மீட்ட போலீசார் விசாரணையை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.