மதுரையில் MBBS படித்துவிட்டு பிச்சையெடுத்து வந்த திருநங்கையை மீட்ட போலீசார் கிளினிக் அமைத்துக் கொடுத்துள்ளனர்.
மதுரையில் திலகர் திடல் காவல் நிலைய சரகத்தில் போலிஸார் ரோந்து சென்ற போது அங்கு தனியாக நின்று கொண்டிருந்த திருநங்கையை பார்த்து விசாரித்துள்ளனர்.
அப்போது அவர் தான் மருத்துவப் படிப்பை முடித்துள்ளதாகக் கூறியுள்ளார். ஆனால் அதை காவலர்கள் நம்பவில்லை.
இதனையடுத்து அவரை காவல் ஆய்வாளரான கவிதாவிடம் அழைத்துச் சென்றுள்ளனர், அங்கு சென்றதும் தன்னுடைய தோழியின் மூலம் சான்றிதழ்களை எடுத்துவரச் சொன்ன அந்த திருநங்கை அதை போலீசாரிடம் காட்டியுள்ளார்.
என்னதான் MBBS படித்திருந்தாலும், திருநங்கைகளுக்கென அங்கீகாரம் இல்லாததால் பிச்சை யெடுத்ததாக கூறியுள்ளார்.
இதனையடுத்து கிளினிக் அமைத்துக் கொடுத்த போலீசார், தைரியம் சொல்லி அனுப்பியுள்ளனர்.
போலீசாரின் இச்செயல் பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.