தீவிரவாதிகளை தடுத்த போது உயிரிழந்த கணவன்!... ராணுவத்தில் சேர்ந்த மனைவி- நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்

Author
Mohan Elango- inTamilnadu
Report

கடந்த 2018-ம் ஆண்டு ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பந்திப்பூர் எல்லைப் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவல் முயற்சியை தடுத்து நிறுத்தியபோது மூன்று இராணுவ வீரர்கள் உயிழந்தனர்.

இவர்களில் ஒருவர் உத்திராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கௌஸ்துப் ரானே. இராணுவப் பணியின்போது உயிரழந்த இவருக்கு சிறப்பு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது. அதனை அவருடைய மனைவி கணிகா பெற்றிருந்தார்.

கணிகா பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வந்துள்ளார். கணவரின் மறைவுக்குப் பிறகு அவர் லட்சியமாக பணியாற்றிய இராணுவத்தில் தானும் இணைய முடிவெடுத்து தனியார் துறை பணியை ராஜினாமா செய்து அரசு தேர்வு எழுதினார்.

அதில் தேர்ச்சி பெற்று சென்னை பயிற்சி மையத்தில் பயிற்சியை முடித்து தற்போது அவரும் இராணுவத்தில் இணைய தயாராக இருக்கிறார்.

கணிகா இதுபற்றி பேசுகையில், “இந்த முடிவு எளிதானதாக இல்லை. என்னுடைய கணவர் நான் என் கணவுகளை தொடர வேண்டும் என்பதில் மிகவும் ஆதரவாக இருந்தார். அவருடைய கணவை இப்போது நான் பின் தொடர்கிறேன். இதே நிலை என் கணவருக்கு வந்திருந்தாலும் அவரும் இதை செய்திருப்பார்.

பயிற்சிக்கு வருவதற்கு முன்பாக நான் 100 மீட்டர் கூட ஓடினது கிடையாது. இப்போது 40 கி.மீ என்னால் ஓட முடியும். முயற்சியும் மனதிடமும் இருந்தால் எல்லாமே சாத்தியப்படும்” என்றுள்ளார்.

கணிகா செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.