நிவர் புயல்: 120 கி.மீட்டர் வேகத்திலும் கரையை கடக்க உள்ளது - வானிலை ஆராய்ச்சி மையம்

Author
Nalini- inTamilnadu
Report

நிவர் புயல் சென்னைக்கு தென்கிழக்கே 470 கிலோமீட்டர், புதுச்சேரிக்கு தென்கிழக்கே 440 கிலோ மீட்டர் தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை கொண்டிருக்கிறது. வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக மாற வாய்ப்பு இருக்கிறது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததாவது -

தீவிர புயலாக மாறும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும்போது 100கி.மீட்டர் முதல் 110கி.மீட்டர் வேகத்திலும் அல்லது 120 கி.மீட்டர் வேகத்திலும் கரையை கடக்கும்.

இதனால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றன. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது.

நாகப்பட்டினம், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய அதிக கனமழை பெய்ய உள்ளது.

மேலும் சென்னை, காஞ்சீபுரம், ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கன மழை முதல் மிக அதிக கன மழை பெய்யும்.

இவ்வாறு வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.