எழுவர் விடுதலை: முதல்வரை சந்திக்காத நிலையில் மு.க.ஸ்டாலின் உடன் ஆளுநர் சந்திப்பு

Author
Mohan Elango- inTamilnadu
Report

ஏழு தமிழர்கள் விடுதலை விவகாரம் இறுதி கட்டத்தை எட்டி வருகிறது. சட்ட சிக்கல்கள் அனைத்தும் தீர்ந்துவிட்ட நிலையில் ஆளுநர் எழுவர் விடுதலை தீர்மானத்தின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார் என்கிற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

ஆளுநர் தீர்மானத்திற்கு ஒப்புதல் தராமல் இருப்பது பற்றி உச்சநீதிமன்றமும் தன்னுடைய கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

சமீபத்தில் ஆளுநர் டெல்லி பயணித்திருந்த போதும் எழுவர் விடுதலை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஆளுநரை சந்திக்க இருந்தது. இந்த சந்திப்பில் 7.5 இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்ததற்கு நன்றி தெரிவிக்கவும் எழுவர் விடுதலை தொடர்பாகவும் விவாதிக்கப்படுவதாக இருந்தது.

ஆனால் இந்த சந்திப்பு இறுதி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. தற்போது ஆளுநர் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்க அனுமதி வழங்கியுள்ளார்.

இந்த சந்திப்பில் ஸ்டாலின் உடன் மூத்த திமுக தலைவர்களும் கலந்து கொண்டனர். எழுவர் விடுதலை தொடர்பாக இந்த சந்திப்பில் வலியுறுத்தியதாகவும் ஆளுநர் உரிய நேரத்தில் முடிவெடுப்பதாக தெரிவித்தார். நல்ல முடிவு எடுப்பார் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.