நிவர் புயல் தற்போது மணிக்கு 5 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிவர் புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து புதுச்சேரியில் கரையைக் கடக்கும். அது தீவிர புயலாக மாறிய பின் சுமார் 140 கிலோ மீட்டர் வேகத்தில் கரையைக் கடக்க நேரிடும்.
சென்னை மற்றும் புறநகரில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு.சென்னையில் இருந்து 430 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. புதுச்சேரியில் இருந்து 380 கிலோ மீட்டர் தொலைவில் புயல் உள்ளது.நிவர் புயல் அதி தீவிர புயலாக மாறி பின்னர் கரையை கடக்கும்.
தற்சமயம் நிவர் புயல் சுமார் மணிக்கு 5 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.