நிவர் புயலால் நாளை என்ன நடக்கும்? வெளியான தகவல்கள்

Author
Praveen Rajendran- inTamilnadu
Report

நிவர் புயல் நாளைக் கரையைக் கடக்கவுள்ள நிலையில் தற்போது நாளை அந்த புயலால் ஏற்படும் பாதிப்புகள் பற்றிய தகவல்களை சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது.

நிவர் புயல் நாளை கரையைக் கடக்கும்போது தமிழகத்தில் மொத்தம் 22 மாவட்டங்களில் அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும். அதில் சுமார் 5 மாவட்டங்களில் 120 கிலோ மீட்டருக்கு அதிகமாக காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வங்க கடலில் உருவாகி உள்ள நிவர் புயல் காரணமாக நாளை தமிழகத்தின் கடலோரத்தில் உள்ள சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்றும், இடையிடையே 100 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசும் என்றும் வானிலை மையத்தின் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

நிவர் புயலால் திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் 21 செ.மீட்டருக்கு மேலான அதீத கனமழை பெய்யுமென கூறப்பட்டுள்ளது.

மேலும் சென்னை,திருவள்ளூர்,காஞ்சிபுரம் உள்பட 13 மாவட்டங்களில் சுமார் 12 முதல் 20 செ.மீ வரை மலை பதிவாகலாம் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.