வங்க கடலில் உருவான "நிவர்" புயல் நாளை மதியம் கரையைக் கடக்க உள்ளது இந்த நிகழ்வை காண்பதற்காக சென்னை வானிலை மையம் ஒரு சில ஏற்பாடுகளை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வங்கக்கடலில் உருவான "நிவர்" புயல் தற்போது சென்னையில் இருந்து 430 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த புயல் நாளை மதியம் மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே கரையைக் கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நிவர் புயல் எதிரொலியாக இன்று 3 மாவட்டங்களிலும். நாளை 8 மாவட்டங்களிலும் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் புயல் கரையை கடப்பதை பார்க்க விரும்புபவர்களுக்காக இணையதள முகவரி ஒன்று வெளியாகியுள்ளது. windytv.com என்ற இந்த லிங்க் பயன்படுத்தி செய்து புயலின் தற்போதைய நிலையை காணலாம்.
இனி புயல் கரையை கடப்பதையும் இந்த லிங்க் மூலமாகவே பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், ஒவ்வொரு மணிநேரத்திற்கு ஒரு முறை புயல் கடந்து செல்லும் மற்றும் மையம் கொண்டிருக்கும் பகுதி காட்டப்பட்டிருக்கும்.