அடுத்த 6 மணி நேரத்தில் தீவிரமடையும் "நிவர்" புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்

Author
Praveen Rajendran- inTamilnadu
Report

வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள "நிவர்" புயல் அடுத்த 6 மணி நேரத்தில் மிக தீவிர புயலாக மாறும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நிவர் புயல் தற்போது தொடர்ந்து கரையை நோக்கி நகர்வதாக சென்னை வானிலை மையம் தெரிவித்தது. மேலும் தற்போதைய நிலவரப்படி அதாவது இரவு 9 மணி நிலவரப்படி புதுச்சேரியில் இருந்து 320 மீட்டர் தூரத்திலும். சென்னையில் இருந்து 410 கிலோ மீட்டர் தொலைவிலும் நிவர் புயல் உள்ளது.

இந்த நிவர் புயலைந்து அடுத்த 6 மணி நேரத்தில் மிகவும் தீவிரமடையும் எனவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.