தமிழகத்தில் தற்போது நிவர் புயல் கரையைக் கடந்த நிலையில் புதிதாக ஒரு புயல் உருவாக உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், வருகிற 29 ஆம் தேதி வங்க கடலின் தென்கிழக்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகுமென கூறப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மேலும் வலுப்பெற்று புயலாக மாறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த புயல் உருவாகும் பட்சத்தில் தமிழகத்தில் உள்ள வேதாரண்யம்,திருவண்ணாமலை,கடலூர்,காஞ்சிபுரம்,செங்கல்பட்டு மட்டும் கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களும் பெரிதாக பாதிக்கப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் அந்த மாவட்டங்களில் பலத்த கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
You May Like This Video