தமிழகத்தில் அடுத்தடுத்து தாக்க 3 புயல்கள் உருவாக உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அண்மையில் வங்கக்கடலில் உருவான "நிவர்" புயல் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் கரையைக் கடந்தது. மேலும் இந்த புயல் எதிர்ப்பார்த்த வேகத்தை விட மிகவும் குறைவாகவே கரையைக் கடந்ததாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த புயல் கரையைக் கடந்தாலும் தமிழகத்தில் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வருகிற டிசம்பர் 1 முதல் டிசம்பர் 3 தேதி வரையில் புதிய புயல் உருவாகும் எனவும். அந்த புயலுக்கு "புரேவி" என பெயரிடப்பட்டுள்ளது.
தற்போது கிடைத்த தகவலானது டிசம்பர் 1 ம் தேதி உருவாகவுள்ள "புரேவி" புயல் கரையைக் கடந்த பிறகு டிசம்பர் 9ம் தேதி மீண்டும் ஒரு புயல் அதே வங்கக்கடலில் உருவாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் ஒட்டுமொத்த தமிழகத்தையும் பெரிதும் பாதிக்க வாய்ப்புள்ளது.
அதன் பிறகு டிசம்பர் 25ம் தேதி மீண்டும் ஒரு புயல் உருவகம் எனவும் உறுதிப்படுத்தப்படாத தகவல் ஒன்றும் வெளியாகியுள்ளது. ஒருவேளை இந்த மூன்று புயல்களும் தாக்க நேரிட்டால் அதற்கான முன்னெச்சரிக்கை எடுப்பதற்கான கால அவகாசம் கூட தமிழக அரசுக்கு இருக்காது.
இதனால் இந்த புயலலை தமிழகம் எவ்வாறு எதிர்கொள்ள போகிறது என்றும். மேலும் இந்த புயல்கள் ஏற்படுத்தும் சீர்குலைவுகளால் தமிழகத்தின் கதி என்ன ஆகுமோ என்ற கேள்விகளும் மக்கள் மனதில் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.