தமிழகத்திற்கு 'ரெட் அலர்ட்' : டிச. 2ல் மிரட்டப்போகும் கனமழை - வானிலை ஆராய்ச்சி மையம் தகவல்

Author
Nalini- inTamilnadu
Report

தமிழகத்தில் டிச. 2ம் தேதி அதி கனமழை பெய்யும் எனவும், மாநிலம் முழுவதும் 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வானிலை ஆராய்ச்சி மையம் தகவல் தெரிவித்ததாவது -

அந்தமான் கடல்பகுதி மற்றும் வங்கக்கடலை ஒட்டிய பகுதிகளில் புதிதாக உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட்டுள்ளது. இதனால் நவம்பர் 29ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக 36 மணி நேரத்தில் வலுப்பெறுகிறது என வானிலை ஆராய்ச்சி மையம் தகவல் தெரிவித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற பின் மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர இருக்கிறது. இதனால், டிச. 2ம் தேதி தமிழகத்தில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இதனால், மாநிலம் முழுவதும் 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கேரளாவில் டிசம்பர் 1, 2 தேதிகளில் பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அடுத்த வாரம் கேரளாவின் பத்தனம்திட்டா, ஆழப்புழை, கோட்டயம், இடுக்கி உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Like This