புதுச்சேரியில் மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட கொரோனா வரியை ரத்து செய்ய முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது
நாடுமுழுவதும் கொரோ ஊரடங்கு காரணமாக பல்வேறு தொழில்கள் முடங்கி வருமான இழப்பு ஏற்பட்டது
வருமானத்தை ஈடுகட்ட பல்வேறு மாநில அரசுகள் பல முயற்சிகளில் ஈடுபட்டது அந்த வகையில் புதுவை மாநில அரசு மதுபானங்களுக்கு கொரோனா வரி' விதித்து வருமானம் எட்டியது.
இந்நிலையில் புதுச்சேரியில் மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட கொரோனா வரி ரத்து செய்யப்பட உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
,மாநில அரசின் முடிவிற்கு துணைநிலை ஆளுநர் ஒப்புதல் தந்தால் மதுபானங்களின் விலை பழைய விலைக்கு மாறும் நடைமுறை உடனடியாக அமலுக்கு வரும் என்று தெரிகிறது