"தனக்கு முதல்வர் பதவியெல்லாம் வேண்டாம்"- சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

Author
Praveen Rajendran- inTamilnadu
Report

தனக்கு முதல்வர் பதவி மீது சுத்தமாக ஆசை இல்லை என்று தெரிவித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் எப்போது அரசியல் பிரவேசம் எடுப்பார் என ரஜினிகாந்த் அவர்களின் ரசிகர்கள் கிட்டத்தட்ட கால் நூற்றாண்டாக காத்திருந்தனர். இதற்கு பலன் அளிக்கும் விதமாக ரஜினிகாந்த அவர்கள் பெயரிடப்படாத ஒரு இயக்கத்தை தொடங்கினர்.

அது அரசியல் பிரெவேசத்திற்கான இயக்கம் என்றாலும், அதற்கான பெயர் சின்னம் மற்றும் அதிகாரபூர்வ அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படலாம் என தெரிவித்தார். இந்த நிலையில் தற்போது வருகிற நவம்பர் 30ம் தேதி ரசிகர்களுடன் ஆலோசனைக்கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு ரஜினிகாந்த் அவர்கள் பேட்டி கொடுத்தார். அதில் அவர் தெரிவித்ததாவது,

"தான் அரசியலுக்கு வருவேன் என தெரிவித்த நாள் முதலே அனைவரும் விமர்சிக்க தொடங்கி விட்டனர். மேலும் ரஜினிகாந்த் அவர்கள் என் ஜெயலலிதா மற்றும் கலைஞர் அவர்கள் உயிருடன் இருந்தபோது அரசியலுக்கு வர தயங்கினார் தற்போது மட்டும் ஏன் வருகிறார் என பலரும் கேள்வி எழுப்புகிறார்கள்.

அதற்கு அவர்கள் அனைவரும் சிறந்த தலைவர்கள் தற்போது அந்த இடம் வெற்றிடமாக உள்ளது அதனை பூர்த்தி செய்யவே தற்போது அரசியலுக்கு வந்துள்ளேன்.

மேலும் தான் தொடங்கும் அரசியல் கட்சியின் மூலம் சிறந்த தலைவரை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துவேன். தனக்கு முதல்வர் பதவி மீது துளியும் விருப்பமில்லை எனவும் அவர் தெரிவித்தார். தனக்கு தற்போது வயது 70 ஆகிறது எந்த நேரத்தில் என்ன நடக்கும் என தெரியாது. ஆகையால் தான் தன்னால் முயன்ற நன்மைகளை இந்த தமிழக மக்களுக்கு செய்வேன்" என தெரிவித்தார்.