’புரெவி’ நாளை புயலாக உருப்பெறுகிறது - வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள எச்சரிக்கை

Author
Mohan Elango- inTamilnadu
Report

தமிழகத்தை நிவர் புயல் தாக்கிச் சென்றுள்ள ஓரிரு தினங்களில் மீண்டும் ஒரு புயல் வங்கக்கடலில் உருவாகியுள்ளது.

இந்த புயல் டிசம்பர் 2-ம் தேதி கரையை கடக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் டிசம்பர் 1,2,3 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி செய்தியாளர்களிம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன், 975 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ள புரெவி இன்று மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை காலை புயலாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் வருகின்ற 2-ஆம் தேதி மாலை இலங்கையைக் கடந்து குமாரி கடற்கரைக்கு நகரக் கூடும்.

இதனால், நாளை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை இராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய அதி கனமழையும், 2-ஆம் தேதி தென்காசி இராமநாதபுரம் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒரு இடைவெளி இடியுடன் கூடிய அதி கனமழையும், புதுக்கோட்டை சிவகங்கை, விருதுநகர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும் இந்த பகுதிகளில் சூறாவளி காற்று 45 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும்.

வருகின்ற 3-ஆம் தேதி தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய அதி கனமழையும், சிவகங்கை, ராமநாதபுரம் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என புவியரசன் தெரிவித்தார்.

மேலும், மீனவர்கள் அடுத்த 3 நாட்களுக்கு தெற்கு வங்கக்கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் தெரிவித்தார்.