தமிழ்நாடு வெதர்மேனுக்கு கொலை மிரட்டல்

Author
Fathima- inTamilnadu
Report

வானிலையை கணித்து கூறுவதால் தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

துல்லியமாக வானிலையை கணித்துக் கூறி பிரபலமானவர் பிரதீப் ஜான், தனக்கு பிடித்த துறை என்பதால் பகுதி நேர வேலையாக பிரதீப் ஜான் இதை செய்து வருகிறார்.

இந்நிலையில் பிரதீப் ஜானுக்கு இணையத்தில் சிலர் கொலை மிரட்டல் விடுப்பதாக அவர் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

அதாவது, வானிலையை கணித்துக் கூறும் அளவுக்கு தகுதியில்லை என்றும், அவதூறு பரப்புவதாகவும், அடித்தே கொல்ல வேண்டும் என கருத்துகளை பதிவிட்டு வருவதாகவும், மதரீதியாக தன் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கான ஸ்க்ரீன் ஷாட்டுகளை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்ட பிரதீப் ஜான், அநாகரீக பேச்சுக்கள் தன் இதயத்தை நொறுக்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து பலரும் பிரீதிப் ஜானுக்கு ஆதரவாக கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.