ரஜினிகாந்த் அவர்களின் முடிவு எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்வோம் - பா.ஜ.க. தலைவர் எல்.முருகன்

Author
Praveen Rajendran- inTamilnadu
Report

ரஜினிகாந்த் அவர்கள் எந்த முடிவை எடுத்தாலும் அதனை முழுமனதுடன் ஏற்றுக்கொள்வோம் என பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அவர்கள் டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு இன்று விமானம் மூலம் சென்னை வந்தடைந்த அவர் செய்தியாளர்களுக்கு பேட்டிக்கொடுத்தார் அதில் அவர் தெரிவித்ததாவது,

நிவர் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தொடங்க முடியாததால் வேல் யாத்திரையை ரத்து செய்தோம். மீண்டும் 4-ந்தேதி முதல் வேல் யாத்திரையை தொடங்கி, 7-ந்தேதி திருச்செந்தூரில் நிறைவு செய்கிறோம்.

ரஜினிகாந்த் மிகப்பெரிய ஆன்மிகவாதி. தேசபக்தர். ரஜினிகாந்த் என்ன முடிவு எடுத்தாலும் பா.ஜ.க. அதை முழு மனதுடன் வரவேற்கும். சட்டசபையில் இந்த முறை பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் நிச்சயமாக இருப்பார்கள். உள்ளாட்சி தேர்தலில் தாமரை மலர்ந்துவிட்டது. அ.தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து கட்சி தலைமைதான் முறையாக அறிவிக்கும்.