ரஜினி என்னை வந்து சந்தித்தால் அவரை நான் விரைவில் குணப்படுத்திவிடுவேன் - ரஜினி ரசிகர் அதிரடி

Author
Nalini- inTamilnadu
Report

நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். அதில், அரசியல் தொடர்பாக கட்சி ஆரம்பிக்கலாமா என்பது குறித்தும் அவர்களிடம் ரஜினி கேள்வி எழுப்பியதாகவும், ரஜினியிடம் பேசிய நிர்வாகிகள், முதல்வர் வேட்பாளராக நீங்கள் இருந்தால்தான் சரியாக இருக்கும் என்று தகவல் சொல்லப்படுகிறது.

முன்னதாக இக்கூட்டத்திதற்காக, போயஸ் தோட்டத்தில் அமைந்துள்ள அவரது வீட்டில் இருந்து நடிகர் ரஜினி புறப்படும்போது, அங்கு கூடியிருந்த ஏராளமான ரசிகர்கள் பட்டாசு வெடித்து, அவர் கார் மீது பூக்கள் வீசி கொண்டாடினார்கள். அதேபோல் கூட்டம் நடக்குமிடமான ராகவேந்திரா மண்டபத்துக்குள் நுழைந்தபோது, அங்கு கூடியிருந்த ஏராளமான ரசிகர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தார்கள்.

அக்கூட்டத்திற்கு வந்த ரஜினி ரசிகர்களில் ஜான் போஸ்கோ என்ற ஒருவர் , 'ரஜினிகாந்த் ரசிகர்களில் நானும் ஒருவன் அவர் தற்போது தேர்தலை சந்தித்தால், நிச்சயம் 51 சதவீத வாக்குகளுடன் வெற்றி பெறுவார். மேலும், சகாயம் ஐ.ஏ.எஸ். போன்றோரும் இணைந்தால் நிச்சயம் 70 சதவீத வாக்குகள் அவருக்கு கிடைக்கும். இன்றைய சூழலில் அவர் நிச்சயம் அரசியலுக்கு வருவார் என நம்பிக்கை இருக்கிறது.

ரஜினிக்கு உடல் நிலை சரியில்லாததால் அரசியலுக்கு வரமாட்டார் என்று தெரிவிக்கிறார்கள். ஆனால், அப்படியெல்லாம் இல்லை. அவர் நன்றாகவே இருக்கிறார். அப்படி ஏதாவது உடல் நிலை குறைவாக இருந்தால், அவர் என்னை சந்தித்தால் நான் அதை சரி செய்வேன்' என்று கூறினார்.

பின்பு கூட்டம் முடிந்து வீடு திரும்பிய ரஜினி அவரது போயஸ் தோட்ட வீட்டின் முன் இருந்த செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், 'அரசியல் பிரவேசம் குறித்த எனது முடிவை எவ்வளவு சீக்கிரம் அறிவிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அறிவிப்பேன் என்று கூறினார்.

You May Like This Video