வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 13 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புரெவி புயல் குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவலில், வங்கக் கடலில் கன்னியாகுமரியில் இருந்து 860 கி.மீ. தொலைவிலும், இலங்கை திரிகோணமலையில் இருந்து 460 கி.மீ தொலைவிலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது.
தற்போது 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும் தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது டிசம்பர் 4-ஆம் தேதி குமரி-பாம்பன் இடையே புயல் கரையைக் கடக்கும்.
இதனால், தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை இராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய அதீத கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது.