டிசம்பர் 7ம் தேதி உருவாகவுள்ள புதிய புயல் - சென்னை வானிலை மையம்

Author
Praveen Rajendran- inTamilnadu
Report

தற்போது உருவாகியுள்ள புரெவி புயல் கரையை கடந்த சில தினங்களில் புதிய புயல் உருவாகும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, நேற்றைய தினத்தில் தாழ்வு மண்டலமாக உருப்பெற்றது.

இன்னும் சிறிது நேரத்தில் புயலாக உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த புயலானது தற்போது தமிழகத்தை நோக்கி 14 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக கூறப்படுகிறது.

"புரெவி" புயலானது வருகிற டிசம்பர் 4ம் தேதி கரையைக் கடக்கும் என தெரிவித்த சென்னை வானிலை மையம், மேலும் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது.

அதில்,"புரெவி புயலுக்கு பிறகு வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வானது டிசம்பர் 7ம் தேதி அன்று சென்னை மற்றும் புதுச்சேரி இடையே செல்வது போல சாட்டிலைட் காணொளி காண்பிக்கிறது.

மேலும் அந்த காற்றழுத்த தாழ்வானது எங்கு செல்லும், பிறகு எந்த இடத்தில கரையைக் கடக்கும் என்பதைக் கண்டறிய 2 முதல் 3 நாட்கள் வரை ஆகும் என தெரிவித்துள்ளது.