வங்கக்கடலில் உருவான புரேவி புயலால் தமிழகத்துக்கு இன்று மட்டும் நாளை ஆகிய தினங்களில் கடும் ரெட் அலெர்ட் விடுத்துள்ளது சென்னை வானிலை மையம்.
வங்கக்கடலில் கடந்த 24ம் தேதி நிவர் என்ற புயல் கரையைக் கடந்தது. அந்த புயலுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டதால் பெரிதான பாதிப்புகள் எதுவும் நிகழவில்லை.
இந்த நிலையில் கடந்த நவம்பர் 29ம் தேதி அன்று "புரேவி" என்ற புயலின் முதல் காற்றழுத்த தாழ்வு உருவாகி அதன்பின் தற்போது அது புயலாக உருவெடுத்துள்ளது.
புரெவி புயல், பாம்பனுக்கு 470 கி.மீ தொலைவிலும், குமரிக்கு 650 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இலங்கை திரிகோணமலைக்கு தென்கிழக்கில் 240 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது.
இதனால் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக குமரி, நெல்லை, தென்காசி ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும்.இதன் காரணமாக தமிழகத்திற்கு அடுத்த 2 நாட்களுக்கு ரெட் அலெர்ட் விடுத்துள்ளது சென்னை வானிலை மையம்.