சசிகலா முன்கூட்டியே விடுதலை ஆகிறாரா? சிறைத்துறையிடம் புதிய கோரிக்கை

Author
Mohan Elango- inTamilnadu
Report

அதிமுக முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து வருகிறார்.

அவரின் தண்டனை காலம் முடிய உள்ள நிலையில் சசிகலா எப்போது விடுதலையாவார் என்பதே அரசியல் அரங்கில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார்.

சிறை தண்டனையோடு விதிக்கப்பட்ட அபராத தொகையும் செலுத்தினால் மட்டுமே சசிகலாவின் விடுதலை சாத்தியமாகும் என கர்நாடக சிறைத்துறை தெரிவித்திருந்தது.

இந்நிலையில் சசிக்கலா கட்டவேண்டிய அபராத தொகையான ரூ.10.10 கோடி சமீபத்தில் செலுத்தப்பட்டது.

சசிகலாவின் தண்டனை காலம் ஜனவரி 27-ம் தேதி தான் முடிவடைகிறது. ஆனால் அதற்கு முன்னரே விடுதலை செய்யக் கோரி சிறை நிர்வாகத்திடம் சசிகலா மனு அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சசிகலா பரோல் எடுத்துக்கொள்ளாத நாட்களை கருத்தில் கொண்டு முன்னரே விடுதலை செய்வதற்கான சாத்தியங்கள் இருப்பதாக சசிகலா தரப்பு தெரிவித்துள்ளது.

சசிகலா விடுதலை தமிழக அரசியலில் என்ன மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதை பலரும் எதிர்நோக்கி உள்ளனர்.