தற்போது உருவாகியுள்ள புரெவி புயலானது கரையைக் கடந்த சில மணிநேரத்தில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு உருவகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான புரெவி புயலானது இன்று மாலை அல்லது நாளை அதிகாலையில் கரையைக் கடக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்தது.
மேலும் இந்த புயல் கரையைக் கடக்கும் சமயத்தில் சுமார் 90 கிலோமீட்டர் வேகத்தில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் மலாய் தீபகற்பம் அருகே நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியானது தெற்கு அந்தமான் கடற்பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வாக உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.