தஞ்சையில் இன்று காலை முதல் கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
வங்கக்கடலில் புரெவி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பொழிந்து வருகிறது. குறிப்பாக தஞ்சாவூர்,திருவையாறு,ஒரத்தநாடு மற்றும் பட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளில் விடாமல் மழை கொட்டி தீர்த்து வருகிறது.
ஆனாலும் இந்த மழையால் சம்பா சாகுபடிக்காக பயிரிட்ட விவசாயிகளுக்கு நற்பயனை அளிக்கும் என்பதால் ஒட்டுமொத்த விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.