டிசம்பர் 7ம் தேதி உருவாகும் புயல் இரட்டைப் புயலாக மாறும் அபாயம் உள்ளது - சென்னை வானிலை மையம்

Author
Praveen Rajendran- inTamilnadu
Report

தற்போது உருவாகியுள்ள "புரெவி" புயலை அடுத்து மேலும் ஒரு புயல் வருகிற டிசம்பர் 7ம் தேதி உருவாகும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள "புரெவி" வருகிற டிசம்பர் 4ம் தேதி கரையைக் கடக்கும் என தெரிவிக்கப்பட்டது. தற்போது உள்ள சூழலில் குமரியில் இருந்து 310 கிலோமீட்டர் தொலைவில் தற்போது மையம் கொண்டுள்ளது. இந்த புயலால் தற்போது பல்வேறு மாவட்டங்களில் அதி கனமழை பெய்து வருகிறது.

தற்போது "புரெவி" புயலே கரையைக் கடக்காத நிலையில். மேலும் ஒரு புயல் டிசம்பர் 7ம் தேதி உருவாகும் என சென்னை வானிலை மையம் தெரிவித்தது. மேலும் தெரிவிக்கையில்,"தற்போது கிடைத்துள்ள சாட்டிலைட் காணொளியில் சென்னை மற்றும் புதுச்சேரி இடையே புதிய புயல் உருவகம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது கிடைத்துள்ள காணொளி படமானது அந்த புயல் இரட்டைப் புயலாக மாறுவது போல காட்சி அளித்துள்ளது. மேலும் இது குறித்து உறுதியான முடிவை நாளை தான் தெரிவிக்க முடியும் " என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.You May Like This Video