உதயநிதியை எதிர்த்து தயாநிதி போட்டியிடுகிறாரா? சூடுபிடிக்கும் தேர்தல் களம்

Author
Mohan Elango- inTamilnadu
Report

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது.

ரஜினி தன்னுடைய நீண்ட கால அரசியல் வருகையை உறுதிபடுத்திவிட்டார். சிறையில் இருக்கும் சசிகலா எப்போது வேண்டுமானாலும் விடுதலை ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம் கடந்த சில வருடங்களாக அரசியல் வனவாசத்தில் இருந்த அழகிரி புதிய கட்சி தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் உள்ளன.

நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற வெற்றியை சட்டமன்ற தேர்தலிலும் தக்க வைக்க வேண்டும் என்பதில் திமுக குறியாக இருக்கிறது.

திமுக தலைவர் ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் கடந்த ஆண்டு திமுகவின் இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டார். அடுத்த தலைமைக்கான முன்னேற்பாடாகவே இது பார்க்கப்பட்டது.

இந்நிலையில் வருகிற சட்டமன்ற தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

அதே சமயம் திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட அழகிரியும் அரசியலில் ரீ-என்ட்ரி கொடுக்க தயாராகி வருகிறார். பாஜகவுடன் அழகிரி கூட்டணி வைப்பார் என்கிற பேச்சும் அடிபட்டு வருகிறது.

அத்தகைய சூழ்நிலையில் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி போட்டியிடக்கூடும் எனச் சொல்லப்பட்டு வருகிறது