அடுத்த 3 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய உள்ளது - சென்னை வானிலை மையம்

Author
Praveen Rajendran- inTamilnadu
Report

தமிழகத்தில் அடுத்து 3 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவான "புரெவி" புயலானது தற்போது தமிழகத்தில் தற்போது மையம் கொண்டுள்ளது. இந்த புயலால் கடந்த இரு தினங்களாக கனமாலி பெய்து வருகிறது அதுவும் ஒரே நாளில் 225 மாவட்டங்களில் மழை பொழிந்துள்ளது.

இந்த புயல் அடுத்த 6 மணி நேரத்தில் தூத்துக்குடி நோக்கி நகரவுள்ளது. இதனால் காற்று 75 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மேலும் தமிழக்தில் அடுத்த 3 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், நாகை,திருவாரூர், தஞ்சை, புதுச்சேரி, காரைக்கால், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, ஆகிய 17 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது .