தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ளன. இதனைத் தொடர்ந்து அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது.
சட்டமன்ற தேர்தலுக்கு அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டிருந்தது. ஆனால் முதல்வர் வேட்பாளரை முடிவு செய்வது குறித்து பாஜக - அதிமுக இடையே தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது.
எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக அதிமுக அறிவித்திருந்த நிலையில் பாஜக அதனை ஏற்க மறுத்து வந்தது.
பாஜக அறிவிப்பவரே முதல்வர் வேட்பாளர் என அக்கட்சியின் தலைவர்கள் பேசிவந்தனர்.
இந்நிலையில் இதுகுறித்து தற்போது பேசியுள்ள தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி 'தமிழகத்தில் பெரிய கட்சியான அதிமுகவே கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளரை முடிவு செய்யும்' எனக் கூறியுள்ளார்.
எனவே முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் பாஜக பின்வாங்கியதாகவே பார்க்கப்படுகிறது.