தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு மூன்று மாதங்களே உள்ள நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரண்டு நாள் பயணமாக 18-ஆம் தேதி செல்கிறார்.
தேர்தல் சமயத்தில் இந்தப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடியைச் சந்திக்க இரண்டு நாள் பயணமாக ஜனவரி 18-ஆம் தேதி டெல்லி செல்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
முதல்வர் பழனிசாமியுடன், தலைமை செயலாளர் சண்முகம், உள்துறை செயலாளர் மற்றும் முக்கிய அதிகாரிகள் செல்கின்றனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
பிரதமர் மோடியை நேரில் சந்தித்து, முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், விரைவில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளதால், கூட்டணி மற்றும் தமிழகத்துக்கு பேரிடர் நிவாரணம் போன்றவை குறித்து ஆலோசனை நடத்தப்படும் என தகவல் கூறப்படுகிறது.
தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் என அறிவித்திருந்தாலும் தலைவர்களிடையே இணக்கமான போக்கு நிலவவில்லை. எனவே இந்தப் பயணம் கூட்டணியை இறுதி செய்யும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.