ரஜினி ரசிகர்களுக்கு சீமானின் அறிவுரை

பொங்கல் திருநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மகளிர் பாசறை சார்பாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துக்கொண்டு சிறப்பித்தார்.

இதைதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சீமான், ரஜினி ரசிகர்களுக்கு அறிவரை வழங்கினார்.

சீமான் கூறியதாவது, ரஜினி அரசியலுக்கு வருவார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருந்திருப்பார்கள், அவர் வரவில்லை என்பது பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும்.

ரசிகர்களுடைய எதிர்பார்ப்பு தவறில்லை. ஆனால், ரஜினிக்கு அவருடைய உடல்நலன், அமைதி, நிம்மதி தான் முக்கியம்.

உண்மையிலேயே அவரை நேசித்த ரசிகர்களாக இருந்தால், அவரை நிம்மதியாக இருக்க விட வேண்டும்.

அவர் இன்னும் பல படங்கள் நடிக்கட்டும், படங்கள் திரைக்கு வரும் போது பார்த்து கொண்டாடுங்கள்.

ரஜினி தேவையான நேரங்களில் அரசியல் கருத்துகளை வெளிப்படுத்துகிறார், அதற்கேற்ப நீங்கள் செயல்படுங்கள்.

அவரை மேலும் மேலும் காயப்படுத்துவது சரியல்ல, அவர் எடுத்த முடிவை ஏற்றுக்கொள்வது தான் நல்ல ரசிகனுக்கு அழகு என சீமான் தெரிவித்துள்ளார்.