தமிழகத்தில் மேலும் 4 மாவட்டங்களில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி

Author
Praveen Rajendran- inTamilnadu
Report

தமிழகத்தில் மேலும் 4 மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு சில இடங்களில் மட்டுமே அனுமதி வழங்கி இருந்தது தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

தற்போது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கூச்சக்கல்லூர் உள்ளிட்ட 3 இடங்களிலும், திருப்பத்தூர் மாவட்டத்தில், காசிநாயக்கன்பட்டி, தொக்கியம், கூத்தூர் உள்ளிட்ட 9 இடங்களில், ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் அணைக்கட்டு, சிவானந்தபுரம், மூஞ்சூர்பட்டு, புலிமேடு, அரியூர் உள்ளிட்ட 25 இடங்களிலும், சிவகங்கை மாவட்டத்தில் தெற்கு தமறாக்கி கிராமத்திலும், ஜல்லிக்கட்டு நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது.