தமிழகத்தில் தேர்வு எப்போது? அமைச்சர் செங்கோட்டையன்

Author
Fathima- inTamilnadu
Report

பொதுத்தேர்தல் அட்டவணை வந்த பின்னரே தேர்வு குறித்து அறிவிக்க உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் ஏளூரில் இலவச ஆடு, கறவை மாடுகளை 406 பயணாளிகளுக்கு 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்.

பின்னர் பேசிய அவர், 'பள்ளிகள் திறப்பில் முதல் கட்டமாக 10, 12 ம் வகுப்புகள் திறக்கப்பட்டுள்ளது என்றும் படிப்படியாக மற்ற வகுப்புகளை தொடங்க ஆய்வு மேற்கொள்ளப்படும் எனவும், தெரிவித்தார்.

பொதுத்தேர்தல் அட்டவணை வந்த பிறகு, பொதுத் தேர்வு குறித்து அறிவிக்க உள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், ஸ்மார்ட் கார்டை பயன்படுத்தி மாணவர்கள் பேருந்தில் பயணிக்கலாம் எனவும், தெரிவித்தார்.