ஊழலில் இருந்து நேர்மைக்கு.. நன்னம்பிக்கை பொங்கட்டும்: கமலின் வாழ்த்து

Author
Fathima- inTamilnadu
Report

தீமைகளில் இருந்து நன்மைக்குச் செல்லும் பயணமாக அமையட்டும் என்று மநீம தலைவர் கமல் பொங்கல் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக புதனன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'அச்சத்தில் இருந்து துணிவுக்கு; ஊழலில் இருந்து நேர்மைக்கு;

தீமைகளில் இருந்து நன்மைக்குச் செல்லும் பயணத்தைத் தொடங்கியிருக்கிறோம். பாதையில் உற்சாகம் பொங்கட்டும்.

நந்தமிழர் திருநாளில் நன்னம்பிக்கை பொங்கட்டும். அதன் குறியீடாக பொங்குக பொங்கல்' என்று பதிவிட்டுள்ளார்.